ரோகித் சர்மாவின் அடுத்த சாதனைக்கு இன்னும் 12 ரன்களே தேவை
- டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் சுசி பேட்ஸ் உள்ளார்.
- ரோகித் 3520 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா டி20 கிரிக்கெட்டில் ஒரு பெரிய மைல்கல்லை தொடவுள்ளார்.
35 வயதான ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதிக போட்டிகளில் விளையாடி, அதிக ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை தவிர அதிக சதங்கள் (4) அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த வீரர்களில் விராட் கோலியுடன் (31) சம நிலையில் உள்ளார்.
இந்நிலையில் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மற்றொரு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெறுவார்.
சுசி பேட்ஸ்
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் சுசி பேட்ஸ் உள்ளார். 34 வயதான அவர் இதுவரை 131 போட்டிகளில் விளையாடி 3531 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோகித் 3520 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எனவே அவர் மேலும் 12 ரன்கள் எடுத்தால் பேட்ஸின் சாதனையை முறியடித்து டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை சர்மா படைப்பார்.