கிரிக்கெட் (Cricket)
ஷஹீன் அப்ரிடி
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஆசிய கோப்பையில் இருந்து விலகல்
- பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படுபவர் ஷஹீன் அப்ரிடி.
- காயம் காரணமாக இவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
துபாய்:
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.
இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்தப் போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஷஹீன் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.