கிரிக்கெட்

4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த முகமது அமீர்

Published On 2024-04-09 13:29 GMT   |   Update On 2024-04-09 13:29 GMT
  • நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
  • இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனைத்து அணியினரும் தங்களது 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் தங்களது அணி வீரர்களை எடுப்பதில் மும்முரமாக உள்ளனர். அந்த வகையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முகமது அமீர், மற்றும் இமாத் வாசிம் இடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த வீரர்கள்:-

பாபர் அசாம் (கேப்டன்) அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமீர், முகமது இர்பான் நியாசி, நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரி, ஷஹீன் அஃப்ரி , உஸ்மான் கான், ஜமான் கான்.

Tags:    

Similar News