கிரிக்கெட்

3வது டி20 போட்டி - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

Published On 2023-03-27 20:23 GMT   |   Update On 2023-03-27 20:23 GMT
  • முதலில் ஆடிய பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 116 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

ஷார்ஜா:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வென்று அசத்தியுள்ளது.

இதையடுத்து, இரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சமீம் அயூப் 49 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News