கிரிக்கெட்

சதமடித்த பாபர் அசாம்

பாபர் அசாம் அபார சதம் - பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு ஆல் அவுட்

Published On 2022-07-17 19:41 GMT   |   Update On 2022-07-17 19:41 GMT
  • பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
  • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சதமடித்து அசத்தினார்.

கெல்லே:

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார். பாபர் அசாம், நசீம் ஷா ஜோடி 10-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தியது.

இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், மெண்டிஸ், தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

Similar News