கிரிக்கெட்

பாம்பா.. நான் அவங்கனு நினைச்சேன்.. தினேஷ் கார்த்திக்கின் நக்கல் டுவிட்.. வீடியோ

Published On 2023-08-01 08:30 GMT   |   Update On 2023-08-01 08:30 GMT
  • வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர்.
  • இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன.

இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடரில் நேற்று கல்லே டைட்டன்ஸ் மற்றும் தம்புல்லா ஆரா அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தம்புல்லா ஆரா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய கல்லே டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தம்புல்லா ஆரா அணி களமிறங்கியது. அந்த அணி 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்தது.

அப்போது திடீரென் மைதானத்துக்குள் பாம்பு புகுந்தது. இதனால் களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்துமாறு கூறினார். இதைத் தொடர்ந்து அம்பயர் மற்றும் அதிகாரிகள் பாம்பை களத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கிரிக்கெட் களத்திற்கு இந்த சம்பவம் புதிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வங்கதேச அணியை கிண்டலடித்துள்ளார். எல்.பி.எல். போட்டியின் போது பாம்பு களத்திற்குள் வந்து இடையூறை ஏற்படுத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தினேஷ் கார்த்திக் டுவீட் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"நாகினி வந்துவிட்டது. நான் இதை வங்கதேசம் என்று நினைத்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வங்கதேச அணியினர் பல சமயங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் நாகினி ஆட்டம் ஆடுவர். இதனை பல எதிரணிகள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளன. அந்த வகையில், இந்த சம்பவத்தை வங்கதேச அணியுடன் ஒப்பிட்டு, அவர்களை தினேஷ் கார்த்திக் கிண்டலடித்துள்ளார். 

Tags:    

Similar News