கிரிக்கெட் (Cricket)
ஐ.பி.எல். 2024 : மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம்
- இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
- முதல் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி.
ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடைசி லீக் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் முன்னணி இடத்திற்கு முன்னேறும். மாறாக மழை காரணமாக போட்டி நடைபெறாத பட்சத்தில் ஐதராபாத் அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கும்.