கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024: பந்துவீச்சாளர்கள் மிரட்டல் - கொல்கத்தாவுக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி

Published On 2024-04-29 15:54 GMT   |   Update On 2024-04-29 15:54 GMT
  • கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
  • வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.

கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News