கிரிக்கெட்
null

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு

Published On 2023-04-18 08:05 GMT   |   Update On 2023-04-18 10:45 GMT
  • விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நேற்றைய போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆர்சிபி வீரர் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோலி களத்தில் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். இந்தச் சூழலில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக பீல்டிங் செய்த போது சிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் பிடித்திருந்தார். அதை கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார். இதுதான் அபராதம் விதிக்கப்பட காரணம்.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

என ஐபிஎல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Tags:    

Similar News