கிரிக்கெட்

ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்குக்கு 102 மீட்டரில் ரிவஞ்ச் கொடுத்த திலக்- வைரலாகும் வீடியோ

Published On 2023-05-04 08:42 GMT   |   Update On 2023-05-04 08:42 GMT
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • அதில் 2 விக்கெட்டில் 2 ஸ்டெம்புகளை உடைத்தார்.

ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டக் அவுட்டில் ரோகித் சர்மா வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 15 முறை டக் அவுட் ஆன தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் நரேன் ஆகியோரின் மோசமான சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கி உள்ளார். அவர் 3.5 ஓவரில் 66 ரன்கள் விட்டுகொடுத்துள்ளார். ஒரு வீரர் 4 ஓவர்களை முழுவதுமாக வீசாமல் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 2 விக்கெட்டில் 2 ஸ்டெம்புகளை உடைத்தார். இதில் திலக் வர்மா விக்கெட்டும் அடங்கும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் அவர் பந்து வீச்சை விளாசினார். குறிப்பாக கடைசியாக அடித்த சிக்சர் 102 மீட்டர் தூரம் சென்றது.


இதனை மும்பை அணி ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமின்றி விக்கெட் எடுத்த வீடியோவையும் சிக்சர் அடித்த வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News