கிரிக்கெட்

ஐபிஎல் கோப்பையை வெல்லுமா ஆர்சிபி? பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இது நடந்தால் போதும்

Published On 2023-05-20 07:57 GMT   |   Update On 2023-05-20 07:57 GMT
  • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும்.
  • மும்பை பெங்களூரு அணிகள் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில் ஐதராபாத்தில் 18-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் பிளேஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும், புள்ளிகள் பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால் பெங்களூரு அணி கடைசி லீக் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் கூட ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். மும்பை ஒருவேளை வெற்றி பெற்றால் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் போதும். ஏனென்றால் மும்பையை விட பெங்களூரு அணி அதிக ரன் ரேட் வைத்துள்ளது. இந்த 2 அணியும் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஒருவேளை கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணி தோல்வியடைந்தால் பெங்களூரு மற்றும் மும்பை அணி வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

Tags:    

Similar News