கிரிக்கெட்

ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

Published On 2023-04-01 15:58 GMT   |   Update On 2023-04-01 15:58 GMT
  • அதிரடியாக ஆடிய கைல் மேயர்ஸ் 72 ரன்கள் விளாசி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் கலீல் அகமது, சேட்டன் சகாரியா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

லக்னோ:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசி, வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். தீபக் ஹுடா 17 ரன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

அதிரடி காட்டிய நிகோலஸ் பூரன் 36 ரன்கள், ஆயுஷ் படோனி 18 ரன்கள் சேர்க்க,  லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. குருணால் பாண்ட்யா 15 ரன்களுடனும், கவுதம் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

டெல்லி தரப்பில் கலீல் அகமது, சேட்டன் சகாரியா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News