கிரிக்கெட்

விக்கெட் எடுத்த ஷர்துல் தாக்கூருக்கு வாழ்த்து தெரிவிக்கும் சக வீரர்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்தியாவுக்கு 250 ரன்கள் இலக்கு

Update: 2022-10-06 14:01 GMT
  • ஹென்ரிச் கிளாசென் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர்.
  • இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட் எடுத்தார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர்கள் ஜனனிமான் மாலன், குயின்டன் டி காக் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மாலன் 22 ரன்களும், குயின்டன் டி காக் 48 ரன்களும் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். கேப்டன் பவுமா 8 ரன்களிலும், மார்க் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.

அதன்பின்னர், அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 

Tags:    

Similar News