கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2,000 ரன்கள் - சுப்மன் கில் புதிய சாதனை

Published On 2023-10-23 04:34 GMT   |   Update On 2023-10-23 06:22 GMT
  • முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தரம்சாலா:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்கள் குவித்தார். இதன்மூலம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 5பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். சுப்மன் கில் 38 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.

ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News