கிரிக்கெட்

தாமதமாக தொடங்கிய முதல் ஒருநாள் போட்டி- இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

Published On 2022-10-06 10:45 GMT   |   Update On 2022-10-06 10:45 GMT
  • தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
  • மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

லக்னோ:

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகியோர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார்கள்.

இந்திய அணி:-

ஷிகர் தவான், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான்

தென் ஆப்பிரிக்கா அணி:-

ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி

Tags:    

Similar News