கிரிக்கெட் (Cricket)

160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

Published On 2023-11-12 21:31 IST   |   Update On 2023-11-12 21:31:00 IST
  • இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • இந்திய தரப்பில் சிராஜ், பும்ரா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ஷ்ரேயஸ் அய்யர், கேஎல் ராகுலின் அதிரடி சதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் லீட் 2 விக்கெட்டுகளையும், மெக்கெரீன், மெர்வே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 2-வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. கொலின் அக்கர்மேன்- மேக்ஸ் ஓ டவுட் நிதானமாக விளையாடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அக்கர்மேன் 35 ரன்னிலும் மேக்ஸ் ஓ டவுட் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நெதர்லாந்து அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சிராஜ், பும்ரா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.India won by 160 runs

Tags:    

Similar News