கிரிக்கெட்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

Update: 2022-10-06 08:09 GMT
  • மழைப் பொழிவு காரணமாக டாஸ் அரை மணி நேரம் தாமதமாக போட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்திய அணி ஆடும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. லக்னோவில் இந்திய அணி ஆடும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.

இந்நிலையில் மழைப் பொழிவு காரணமாக டாஸ் அரை மணி நேரம் தாமதமாக போட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டம் 2 மணிக்கு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோத இருந்த ஒருநாள் போட்டி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News