கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையை வென்றால் இந்திய அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு

Published On 2022-09-30 09:07 GMT   |   Update On 2022-09-30 09:07 GMT
  • முதல் சுற்றில் 8 அணிகள் குரூப் சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தும்
  • குரூப் சுற்றில் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16-ந்தேதி தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

முதல் சுற்றில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குரூப் சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்று ஏ, பி என இரண்டு பிரிவுகளாக தலா ஆறு அணிகளுடன் பிரிக்கப்பட்டு விளையாடப்படும். இரண்டு சுற்றிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படுகிறது.

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர் வழங்கப்படும். சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும். தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய பண மதிப்பில் ரூ. 45,67,17,240) ஆகும்.

Tags:    

Similar News