கிரிக்கெட்

என்னை கிண்டல் செய்யாத ரசிகர்களே கிடையாது: அவர்கள் வாயை அடைத்ததில் மகிழ்ச்சி- ஹாரி புரூக்

Published On 2023-04-15 09:32 GMT   |   Update On 2023-04-15 09:32 GMT
  • டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் இடம் தான் பேட்டிங் செய்ய ஒரு சிறப்பான இடம் என்று அனைவரும் கூறுவார்கள்.
  • சமூக வலைதளத்தில் என்னை கிண்டல் செய்யாத ரசிகர்களே கிடையாது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரர் ஹாரி புரூக் 55 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 100 ரன்களை குவித்தார்.

பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்த ஹாரி புரூக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சதம் அடித்தது குறித்து ஹாரி புரூக் கூறியதாவது:-

இந்த இரவு எனக்கு ஒரு ஸ்பெஷலான இரவு. ஒரு வழியாக நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த போட்டியின் மிடில் ஓவர்களில் சற்று பதட்டமாக தான் இருந்தேன். ஆனாலும் அதன்பிறகு என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சிறப்பாக விளையாட முடிந்தது. டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் இடம் தான் பேட்டிங் செய்ய ஒரு சிறப்பான இடம் என்று அனைவரும் கூறுவார்கள்.

ஆனால் என்னை பொறுத்தவரை நான் எங்கு களமிறங்கி விளையாடவும் தயார். ஏனெனில் என்னுடைய பேட்டிங் சக்சஸ் பெரும்பாலும் ஐந்தாவது இடத்தில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. என்னுடைய நான்கு டெஸ்ட் சதங்களுமே ஐந்தாவது இடத்தில் இறங்கி கிடைத்தது தான். இந்த போட்டியில் ரசிகர்கள் எங்களை உற்சாகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

சமூக வலைதளத்தில் என்னை கிண்டல் செய்யாத ரசிகர்களே கிடையாது. இன்று என் சதத்தை பார்த்து பாராட்டிய ரசிகர்கள் தான் சில நாட்களுக்கு முன்னர் என்னை விமர்சித்து இருந்தனர். இப்போது அவர்களையெல்லாம் வாயடைத்து போக வைத்ததில் மகிழ்ச்சி. நான் இன்று என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.

என ஹாரி புரூக் கூறினார்.

Tags:    

Similar News