கிரிக்கெட்
null

நான் மறுபடியும் ஐபிஎல் தொடரில் விளையாட காரணம் என் மகன்தான்- பியூஷ் சாவ்லா நெகிழ்ச்சி

Published On 2023-05-13 07:14 GMT   |   Update On 2023-05-13 07:35 GMT
  • நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன்.
  • நான் இந்திய அணிக்காக ஆடிய போது, என் மகன் குழந்தையாக இருந்தார்.

மும்பை:

ஐபிஎல் தொடரின் 57-வது லீக் போட்டியில் குஜராத்- மும்பை அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது. 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நடப்பு சீசன் முழுவதும் மும்பை அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களாக பியூஷ் சாவ்லா இருந்து வருகிறார். மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த சீசனில் வர்ணனை செய்து கொண்டிருந்த பியூஷ் சாவ்லா, நடப்பு சீசனில் களமிறங்கி மிரட்டலாக விளையாடி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன் என பியூஷ் சாவ்லா கூறியுள்ளார்.

இது குறித்து பியூஷ் சாவ்லா கூறியதாவது:-

நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன். ஏனென்றால் நான் இந்திய அணிக்காக ஆடிய போது, என் மகன் குழந்தையாக இருந்தார். கிரிக்கெட்டை அவரால் அந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல. கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. என் ஆட்டத்தை தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்க்கிறான்.

ஒவ்வொரு ஆட்டம் முடிவடைந்த பின்னரும், என்னுடைய பந்துவீச்சை இருவரும் சேர்ந்து ரிவ்யூ செய்து வருகிறோம்.

என்று அவர் கூறினார். 

Tags:    

Similar News