கிரிக்கெட்

இறுதி போட்டியில் ஐதராபாத் தோல்வி: கண்ணீர் விட்டு அழுத காவ்யா மாறன்- வீடியோ வைரல்

Published On 2024-05-26 17:29 GMT   |   Update On 2024-05-26 17:29 GMT
  • கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.
  • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

இந்நிலையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தப்படியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்..

அவர் ஐதராபாத் அணி பேட்டிங் செய்யும் போதே சோகமடைந்து உட்கார்ந்து இருந்தார். இறுதியில் தோல்வியடைந்ததால் வேதனை தாங்காமல் அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காவ்யா மாறனை பார்ப்பதற்காக கூட நிறைய ரசிகர்கள் ஐதராபாத் போட்டியை பார்த்ததாக மீம்ஸ்கள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News