கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா

பாட்னர்ஷிப்பில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா

Published On 2022-06-29 06:53 GMT   |   Update On 2022-06-29 06:53 GMT
  • ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா தட்டிச் சென்றார்.
  • 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. யாரும் எதிர்பார்க்க முடியாத அளவில் அவர்களது பேட்டிங் இருந்தது. இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோல்வி அடைந்தது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சாம்சன் மற்றும் ஹூடா ஜோடி 87 பந்துகள் சந்தித்து 176 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை சாம்சன் - ஹூடா படைத்துள்ளது. இதற்கு முன்பு 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

டி20 தொடரில் ஓட்டு மொத்தமாக அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இவர்கள் 9-வது இடத்தை பிடித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜசாய் மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் பட்டியலில் உள்ளனர். இந்த ஜோடி அயர்லாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News