கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பைக்கான ஜெர்சியை அறிமுகம் செய்த கனடா அணி
- இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் ஏ பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது.
- முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 20 அணிகள் விளையாடுகின்றன.
இதனால் குட்டி குட்டி அணிகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குட்டி அணிகளில் ஒன்று கனடா. குரூப் "ஏ" பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது. மேலும் அயர்லாந்து, பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட இருக்கிறது.
இந்த நிலையில் கனடா அணி டி20 போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர். கனடா அணியின் தேசியக்கொடியில் சிகப்பு வண்ணம் காணப்படும். அதை வலியுறுத்தும் வகையில் சிகப்பு நிறத்தில் ஜெர்சி அமைந்துள்ளது.