கிரிக்கெட்

பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை 318 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்

Published On 2023-12-27 03:35 GMT   |   Update On 2023-12-27 03:35 GMT
  • 2-வது நாளில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர்.
  • 30.5 ஓவரில் 131 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போரன் மைதானத்தில் "பாக்சிங் டே" டெஸ்டாக நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் (38), கவாஜா (42) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

மழைக்காரணமாக நேற்றைய ஆட்டத்தின் பெரும்பகுதி ஆட்டம் தடைபட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா 66 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 44 ரன்களுடனும், டிராவிட் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லபுசேன் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கடைநிலை வீரர்கள் அலேக்ஸ் கேரி (4), ஸ்டார்க் (9), கம்மின்ஸ் (13), லயன் (8) அடுத்தடுத்து ஆட்மிழந்தனர். மிட்செல் மார்ஷ் 41 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 318 ரனனில் ஆல்அவுட் ஆனது.

இன்று 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 131 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆமிர் ஜமால் 3 விக்கெட் சாய்த்தார்.

பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணி 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

Similar News