கிரிக்கெட்

இப்ராகிம் ஜத்ரன்


null

ஆறுதல் அளித்த இப்ராகிம்... பாகிஸ்தானுக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

Published On 2022-09-07 15:44 GMT   |   Update On 2022-09-07 18:25 GMT
  • ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராகிம் ஜத்ரன் சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
  • கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 18 ரன்கள் விளாசினார்.

சார்ஜா:

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சார்ஜாவில் இன்று நடைபெறும் சூப்பர்-4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்ங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஜோடி 36 ரன்களில் பிரிந்தது. அதன்பின்னர் நிதானமாக விளையாடினர். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.இப்ராகிம் ஜத்ரன் சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ரன்கள் சேர்த்தார். ஹஸ்ரத்துல்லா 21 ரன்கள், ரஹ்மானுல்லா 17 ரன்கள், கரிம் ஜனத் 15 ரன்கள் எடுத்தனர். கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News