கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி- 50 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி

Published On 2023-09-17 17:16 IST   |   Update On 2023-09-17 17:43:00 IST
  • 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது.
  • சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 3 மணியளவில் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழையால் தாமதமானது.

இதைதொடர்ந்து, 3.40 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. முதலாவதாக களமிறங்கிய குசல் பெரேரா முதல் பந்திலேயே அவுட்டானார். தொடர்ந்து, பதும் நிசான்கா 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

சதீரா மற்றும் சரீத் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோரும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தனஞ்சயா டி சில்வா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசல் மெடிஸ் 17 ரன்களில் அவுட்டானார்.

இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது.

12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துள்ளது.

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய பந்து வீச்சாளர் சிராஜ் அசத்தியுள்ளார்.

12.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்களை எடுத்து இலங்கை அணி விளையாடி வந்தது.

தொடர்ந்து, துணித் வெல்லாலகே 8 ரன்களும், பிரமோத் மதுஷான் ஒரு ரன்னும் ஆட்டமிழந்தனர். மதீஷா பதிரனா ரன் எடுக்கால் ஆட்டமிழந்தார். துஷன் ஹேமந்த் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமல் இருந்தார்.


இந்நிலையில், 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி சுருண்டது.

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News