சினிமா
நடிகர் திலீப் குமார் மறைவு - பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல்
நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நடிகர் திலீப் குமாரின் மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும். அவர் திரைத்துறை ஜாம்பவானாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற அபிமானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், “இந்திய சினிமாவில் திலீப் குமாரின் பங்களிப்பு அடுத்த தலைமுறைகளின் நினைவில் எப்போதும் இருக்கும். திலீப் குமாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என கூறியுள்ளார்.