சினிமா

டெல்லியை உலுக்கிய மாணவி கற்பழிப்பு சம்பவம் இணையதள படமானது

Published On 2019-01-30 12:25 GMT   |   Update On 2019-01-30 12:25 GMT
டெல்லியில் பேருந்தில் தனது நண்பருடன் சென்ற மருத்துவ மாணவி சிலரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டத்தை தழுவி இணைய படம் ஒன்று தயாராகி உள்ளது. #DelhiRapeCase #DelhiCrime
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் தனது நண்பருடன் சென்ற மருத்துவ மாணவி சிலரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

நாட்டையே பரபரப்பாக்கிய இந்த சம்பவத்தில் போலீசார் குற்றவாளிகளைக் கண்டறிந்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 17 வயது சிறுவன் ஒருவனும் அடங்கும். அடுத்த சில ஆண்டுகளில் அவன் வயதை காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டான். இது சர்ச்சை ஆனது.

மருத்துவ மாணவி வழக்கை தழுவி 7 மணிநேரம் ஓடக்கூடிய அளவில் டெல்லி கிரைம் என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது. ஷிபாலி ஷா, லைப் ஆப் பை படத்தில் நடித்த அடில் ஹுசைன், டென்சில் ஸ்மித், ராஷிகா டுகல், ராஜேஷ் தைலங், யாஷாஸ்வினி டயானா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சன் டேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்ட ‘டில்லி கிரைம்’ தொடர் இந்திய கனடா இயக்குநர் ரிச்சி மேத்தாவால் இயக்கப்பட்டது. ஏழு பகுதிகளாக உருவாகியுள்ள இந்தத் தொடர் மார்ச் 22-ந் தேதி முதல் நெட் பிளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.



படம் குறித்து இயக்குநர் ரிச்சி மேத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி கிரைம் படத்தை இயக்கியது தனிப்பட்ட முறையில் என்னை உருமாற்றிய பயணம். சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியது, போலீசார் விசாரித்த பாதையில் மறுதேடல் செய்தது.

பல்வேறு வரம்புகள் இருந்தபோதும் வழக்கை முடிக்க உறுதியுடன் அவர்கள் செயலாற்றியது என முக்கியமான பயணமாக அமைந்தது. இதுகுறித்த உரையாடலை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கையுடன் உள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது. #DelhiRapeCase #DelhiCrime #RichiMetha

Tags:    

Similar News