சினிமா

மெரினா என்று வந்துவிட்டால் நீதி எப்போதுமே வெல்லும் - விஷால் ட்விட்

Published On 2018-08-08 13:18 IST   |   Update On 2018-08-08 13:18:00 IST
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால் மெரினா என்று வந்துவிட்டால் எப்போதுமே நீதி வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கருணாநிதி உடலுக்கு இன்று காலை ராஜாஜி அரங்குக்கு நேரில் சென்று நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது ட்விட்டர் பக்கத்தில், 

நல்லது, மெரினா என்று வந்துவிட்டால் எப்போதுமே நீதி வெல்லும்... இப்படியாக ஒரு மைல்கல் தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மனமார்ந்த நன்றிகள்... மெரினா கலைஞர் ஐயாவுக்கான இடம் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

மெரினாவில் கருணாநிதிக்கு இடமளிக்க தமிழக அரசு மறுத்த நிலையில், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
Tags:    

Similar News