சினிமா

கவுரி லங்கேசுக்கு முன்பே, நடிகர் கிரிஷை கொல்ல சதி

Published On 2018-07-27 03:48 GMT   |   Update On 2018-07-27 03:48 GMT
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவருக்கு முன்பே நடிகர் கிரிஷ் கர்னாட்டை கொலை செய்ய, கொலையாளிகள் முடிவு செய்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. #GirishKarnad
பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கவுரி லங்கேசுடன் நெருங்கிய நட்பில் இருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டங்களை தெரிவித்து வந்தார். குற்றவாளிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த சம்பவம் குறித்து கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திய நிலையில், இந்த கொலை தொடர்பாக பரசுராம் வாக்மோரே, அமோல்காலே, நவின்குமார், அமித்தேக்வேகர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

அமோல்காலேவிடம் இருந்து டைரி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் மேலும் கொலை செய்யவேண்டியவர்கள் என்ற பட்டியலில், நடிகர் கிரிஷ் கர்னாட் பெயர் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் தமிழில் ஹே ராம், காதலன், ரட்சகன், மின்சார கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். 



கவுரி லங்கேசுக்கு முன்பே, கிரிஷை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜும் இவர்களின் கொலை பட்டியலில் இருந்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. #GirishKarnad

Tags:    

Similar News