சினிமா

காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்

Published On 2018-06-04 08:24 GMT   |   Update On 2018-06-04 08:24 GMT
காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்திற்கு எதிராக யார் போராடினாலும், படம் கண்டிப்பாக வெளியாகும். அதை யாரும் தடுக்க முடியாது என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது. 

காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.



இந்த நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், 

பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல. ஒரு பொதுவான பிரச்சனையை சுட்டிக் காட்டி சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும். படத்திற்கு எதிராக போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.

படத்தை ரிலீஸ் செய்ய கர்நாடக வர்த்தக சபை தடை கோரவில்லை. விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாகவே படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth #PrakashRaj
Tags:    

Similar News