சினிமா
சாகர், சாயாதேவி

கேக்காது

Published On 2020-08-28 14:22 IST   |   Update On 2020-08-28 14:22:00 IST
அறிமுக இயக்குனர் ரோஜர் டேனி இயக்கத்தில் சாகர், சாயாதேவி நடிப்பில் உருவாகும் ‘கேக்காது’ படத்தின் முன்னோட்டம்.
கன்னட பட உலகின் கதாநாயகன் சாகர், ‘கேக்காது’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வருகிறார். இவருக்கு ஜோடியாக இயக்குனரும் நடிகருமான ‘யார்’ கண்ணனின் மகள் சாயாதேவி அறிமுகமாகிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரதாப்போத்தன், மனோபாலா, ஏ.எல்.அழகப்பன், மயில்சாமி, வையாபுரி, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள். டேனியல் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார், ரோஜர் டேனி. 

படத்தைப் பற்றி இயக்குனர் ரோஜர் டேனி கூறியதாவது: “உலகம் எங்கும் அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. வெளிப்பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்து வரும் அறிவியல் வருங்காலத்தில், ‘சிப்’ வடிவில் மனித உடலுக்குள் புகுந்து ஆட்டுவிக்கப் போகிறது. இதற்கான வேலைகள் ஒரு நாட்டில் ரகசியமாக நடக்கிறது.



இந்த உண்மையை கதாநாயகன் கண்டுபிடிக்கிறான். மனித உடலுக்குள் புகுந்து அறிவியல் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? என்ற உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்கள், படத்தின் உச்சக்கட்டம். இந்த கதைக்குள் அரசியலும் இருக்கிறது.” என கூறினார்.

Similar News