சினிமா
நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சதுரங்கவேட்டை 2’ படத்தின் முன்னோட்டம்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. அரவிந்த் சாமி நடிக்க ‘சதுரங்கவேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி உள்ளார். முந்தைய பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.
இப்படம் தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகர்வாழ் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் நாசர், ராதாரவி, பொன்வண்ணன், ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் மனோபாலா தயாரித்துள்ளார்.