சினிமா
பூமிகா படத்தின் போஸ்டர்

பூமிகா

Published On 2020-08-23 14:19 IST   |   Update On 2020-08-23 14:19:00 IST
ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பூமிகா’ படத்தின் முன்னோட்டம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். 

ஒரு கட்டிடத்தை கட்ட செல்லும் கட்டிடக்கலை நிபுணர்கள் அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள். 10 வருடங்களாக அந்த கட்டிடத்தை யாராலும் கட்டி முடிக்க முடியாத நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவருக்காக துப்பறிந்து அங்குள்ள மர்மத்தை கண்டுபிடிப்பது, படத்தின் கதை. 

படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம். டைரக்டர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஒரு நல்ல நண்பர். திறமையான டைரக்டர். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், ஓபூமிகா’வும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது. இரவு-பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Similar News