சினிமா
ஆரவ், அஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜ பீமா’ படத்தின் முன்னோட்டம்.
ஆரவ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராஜ பீமா’. இப்படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்க இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். ஆரவ் மற்றும் அஷிமா நர்வால் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாசர், கே.எஸ்.ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சைமன் கே கிங் இசையமைக்க, சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தற்போது 95 பின்னணி வேலைகளையும் படக்குழுவினர் முடித்துள்ளனர். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிட்டு, தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.