சினிமா
பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஜல்லிக்கட்டு வீரராக அசத்தும் ‘மதுர வீரன்’ படத்தின் முன்னோட்டம்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்தாக ‘மதுர வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் பி.ஜி.முத்தையா.
இசை - சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் - யுகபாரதி, எடிட்டிங் - கே.எல். பிரவீன், கலை - விதேஷ், சண்டை பயிற்சி - ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு - கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு - ஜி.சுப்பிரமணியன்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டபடம். இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.