சினிமா

ஆறாம் திணை

Published On 2018-01-02 14:31 IST   |   Update On 2018-01-02 14:31:00 IST
அருண்.சி இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன் பேயை காதலிக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘ஆறாம் திணை’ படத்தின் முன்னோட்டம்.
எம்ஆர்கேவிஎஸ் சினி மீடியா சார்பாக ஆர்.முத்துக் கிருஷ்ணன், எம்.வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’.

இதில், கதையின் நாயகியாக வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரவி மரியா, லாவண்யா, குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு - ராஜா, இசை - ராஜ் கே.சோழன், படத்தொகுப்பு - திருமலை, இயக்கம் - அருண்.சி. படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

“இலக்கியங்களில் 5 வகை நிலங்கள் குறித்து ஐந்திணைகள் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய் சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது. பேய்ப் படங்களின் மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் ரசிகர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 



பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் ‘நான்கடவுள்’ ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்பாகவும் இருக்கும். ரவிமரியாவுக்கும் இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். ‘கலக்கப்போவது யாரு’ டி.வி. நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்” என்றார்.

Similar News