சினிமா

சென்னை பக்கத்துல

Published On 2018-01-01 14:04 IST   |   Update On 2018-01-01 14:04:00 IST
வேலன் இயக்கத்தில் கிராமத்து உண்மை காதலை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சென்னை பக்கத்துல’ படத்தின் முன்னோட்டம்.
டி.சி.பி. பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் ‘சென்னை பக்கத்துல’.

இதில் புதுமுகம் எஸ்.சீனு கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். இவர்களுடன் மாணிக்க விநாயகம், அஞ்சலி தேவி, ஓ.ஏ.கே. சுந்தர், வின் சென்ட்ராஜ், வாசு விக்ரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

ஒளிப்பதிவு - மகி பாலன், இசை - ஜித்தன் கே.ரோ‌ஷன், கலை - ஸ்ரீ, எடிட்டிங் - சி.மணி, நடனம் - தீனா, தயாரிப்பு - தெய்வானை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - வேலன். படம் பற்றி கூறிய அவர்...



“இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு காதல் காவியம். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் காதல் மிகவும் கேவலமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் கிராமபுறங்களில் புனிதமான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதை இது. இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதை தான் இந்த படத்தில் கூறி இருக்கிறோம். தற்போது நாட்டிற்கு மிகவும் தேவையான விவசாயத்தையும் சொல்லி இருக்கிறோம். விவசாயியாக மாணிக்க விநாயகம் வாழ்ந்து இருக்கிறார்” என்றார்.

Similar News