சினிமா
யுவன் முத்தையா இயக்கத்தில் திறமைசாலிகளின் சாதனையாக உருவாகும் ‘ஈடிலி’ படத்தின் முன்னோட்டம்.
சாகர் புரொடக்சன்ஸ், சித்தர் மூவிஸ் இணைந்து தயாரிக் கும் படம் ‘ஈடிலி’.
இதில், லிம்மல் ஜி, லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சரவணராஜ், இசை - இஷான்தேவ், படத்தொகுப்பு - சுதர்ஷன், ஸ்டண்ட் - ஸ்டண்ட்சாம், தயாரிப்பு - கே.பி. தயாசாகர், இணை தயாரிப்பு - யுவன் முத்தையா, எழுத்து, இயக்கம் - யுவன் முத்தையா.
அவரிடம் படம் பற்றி கேட்ட போது...
“‘ஈ.டிலி’ என்பதற்கு ஈடு இல்லாதவன் என்பது அர்த்தம். சில திறமை சாலிகளை ஈடிலி என்பார்கள். இந்த படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களுமே ‘ஈடிலி’ தான்.
நாளை யாரை சந்திக்கப் போகிறோம்? நாளை மறுநாள் யாருடன் பேசப்போகிறோம்? என்பது யாருக்கும் தெரியாது. அந்த சந்திப்புகளால் நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். அது போன்ற சில சம்பவங்களை சந்திக்கும் பாத்திரங்கள் எப்படி மாறுகிறார்கள் என்பது தான் கதை.
சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. உளவியல் சார்ந்த, கடத்தல் பிளாக் மார்க்கெட் சார்ந்த விஷயங்களை புதிதாக சொல்லி இருக்கிறோம்“ என்றார்.
இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியே ஷன் டி.சிவா, சுரேஷ் காமாட்சி, ‘ஸ்கெட்ச்’ பட இயக்குனர் விஜய்சுந்தர், ஒளிப்பதிவாளர் சிவகுமார், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.