சினிமா

எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல

Published On 2017-12-21 14:24 IST   |   Update On 2017-12-21 14:24:00 IST
முருகலிங்கம் இயக்கத்தில் டி.வி. புகழ் ஜெகன் போலீசாக நடிக்கும் ‘எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.
முத்து வினாயகா மூவிஸ் நிறுவனம் சார்பில் ராஜாமணிமுத்து கணேசன் தயாரிக்கும் படம் ‘எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’.

இதில் டி.வி. புகழ் ஜெகன் கதை நாயகனாக காமெடி கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஹானா நடிக்கிறார். வில்லனாக பாடலாசிரியர் பிறைசூடன் நடிக்கிறார். இவர்களுடன் விவேக்ராஜ், சேரன் ராஜ், டிசோசா ரவிக்குமார், கொட்டாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சிவராஜ், பாடல்கள் - பிறைசூடன், கதை, திரைக்கதை, வசனம் - காரைக்குடி நாராயணன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் எழுதியுள்ளார். தயாரிப்பு - ராஜாமணி முத்து கணேசன், இயக்கம் - முருகலிங்கம். இவர் இயக்குனர் கார்த்திக் ரகுநாத்திடம் உதவியாளராக பணியாற்றியவர். படம் பற்றி கூறிய இயக்குனர்...



“ இது முழு நீள நகைச் சுவை படமாக உருவாகிறது. ஒரு பசு மாட்டினால் ஏற்படும் பிரச்சினை, அதனால் ஒரு காவல் நிலையத்தில் ஏற்படும் கலாட்டாக்கள், இதில் சிக்கிக்கொள்ளும் ஒரு போலீஸ்காரரின் காதலும், கல்யாணமும் வில்லங்கமாகி விபரீதமாகிறது. அவர் இந்த பிரச்சினையை எப்படி தீர்க்கிறார்? தப்பிக்கிறார். கல் யாணம் நடந்ததா? இதன் விளக்கம் தான் இந்த படம்” என்றார். பாகனேரியில் முதல் கட்டப்படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் 24 வரை நடைபெறுகிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் ஜனவரி 18 முதல் 30 வரை நடக்கிறது.

Similar News