சினிமா

களிறு

Published On 2017-12-19 09:24 GMT   |   Update On 2017-12-19 09:24 GMT
ஜி.ஜே.சத்யா இயக்கத்தில் அதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்தும் ‘களிறு’ படத்தின் முன்னோட்டம்.
சி.பி.எஸ். பிலிம்ஸ், அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘களிறு’. 

இதில் புதுமுகம் விஷ்வக் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகிகளாக அனுகிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் துரை சுதாகர், நீரஜா, ஜான், உமாரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு - டி.ஜே.பாலா, இசை - என்.எல்.ஜி.சிபி, கலை - மார்டின் டைட்டஸ், ஸ்டண்ட் - எஸ்.ஆர்.முருகன், எடிட்டிங் - நிர்மல், நடனம் - ராதிகா, தயாரிப்பு - விஷ்வக், இனியவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜி.ஜே.சத்யா.

படம் பற்றி கூறிய இயக்குனர்...

“காதலித்தாலும், கல்யாணம் பண்ணினாலும் ஒரே ஜாதியில் தான் பண்ணவேண்டும். இல்லையேல் கொலை. அப்படி நடக்கிற கொலைகள் தற்கொலைகளாக எப்படி மாற்றப்படுகின்றன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் ‘களிறு’. ஆணவக்கொலை கள் காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. நிறைய பொருளாதார ஆணவக் கொலைகளும் நடக்கின்றன.



இது எதார்த்தத்தை மீறாத ஒரு கிராமத்து வாழ்வியலை கண்முன் நிறுத்தும் படம்.

அதிகாரமும், பணபலமும் இருப்பதால் தான் இது போன்ற ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது மாற்றப்பட வேண்டும். அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளை அடையாளப்படுத்தி மக்களை விழிப்படைய செய்யவே இந்த படம்” என்றார்.

Tags:    

Similar News