சினிமா

பஞ்சுமிட்டாய்

Published On 2017-11-30 14:40 IST   |   Update On 2017-11-30 14:40:00 IST
எஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் முன்னோட்டம்.
தீபம் சினிமா வழங்கும் படம் ‘பஞ்சுமிட்டாய்’.

இதில் மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சென்ட்ராயன், பாண்டியராஜன், தவசி, வித்யுலேகா, பாண்டு, அர்ஜுனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை - டி.இமான், ஒளிப்பதிவு - மகேஷ் கே.தேவ். திரைக்கதை - ஜே.பி.சாணக்யா, எழில்வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார். தயாரிப்பு - எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார். இயக்கம் - எஸ்.பி.மோகன்.

இயல்பாக நடக்க முடியாத யதார்த்த நிகழ்ச்சிகளை முதல் முறையாக, மாய யதார்த்தயுத்தியில் சொல்லி இருக்கும் கதை ‘பஞ்சுமிட்டாய்’. இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கிராமத்தில் இருந்து சென்னை வரும் புரோட்டா மாஸ்டர். சென்ட்ராயன் சென்னையை சேர்ந்த டீ மாஸ்டர். ஆனந்த் ஜோடியாக வரும் நிகிலா கிராமத்து பெண்.



2 நண்பர்கள், கணவன் - மனைவி உறவு, குடும்பம், சென்னை வாழ்க்கை, கிராம சூழ்நிலை ஆகியவற்றை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். எல்லா மனித உணர்வுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

டி.இமான் இசையில் முதல் முறையாக உருவான முதல்-இரவு பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கான மாய காட்சிகளை ‘2.0’ படத்தில் பணி புரியும் சீனிவாசமோகன் அமைத்திருக்கிறார். பஞ்சுமிட்டாய் படத்தை பார்த்த இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் மிகவும் பாராட்டினார்கள்” என்றார்.

Similar News