சினிமா

ஒரு கதை சொல்லட்டுமா

Published On 2017-11-13 02:24 GMT   |   Update On 2017-11-13 02:24 GMT
ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி நாயகனாக களம் இறங்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தின் முன்னோட்டம்.
ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. தற்போது இவர் கதாநாயகனாக அவதாரம் எடுத் திருக்கிறார் இவர் நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.

பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக் குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை பார்ம் ஸ்டோன் மல்டிமீடியா ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார்.



இயக்குனர் பிரசாத் பிரபாகரன் இதுபற்றி கூறும் போது...

“ ஹாலிவுட், பாலிவுட்டை சேர்ந்த 80-க்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை பதிவு செய்வதில் பணிபுரிந்தனர். 22 கேமராக்களை கொண்டு அந்த விழாவில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம்.

ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் இந்த படம் வெளிவருகிறது” என்றார். இந்த படத்தின் பாடல்கள் - டிரைலரை ஆண்டனி எடிட் செய்துள்ளார். பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.


Tags:    

Similar News