சினிமா

தடம்

Published On 2017-10-28 12:15 IST   |   Update On 2017-10-28 12:15:00 IST
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.
‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரிக்கும் படம் ‘தடம்’.

இதில் அருண்விஜய் நாயகனாக நடிக்கிறார். அவருடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ படங்களை இயக்கியவர். “வித்தியாசமான கதை களத்தில் ‘தடம்’ பிரமாண்டமாக தயார் ஆகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.



அதே போல் தடம் படமும் அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தடம்’ வேகமாக வளர்ந்து வருகிறது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Similar News