சினிமா

இருட்டு அறையில் முரட்டு குத்து

Published On 2017-10-20 17:40 IST   |   Update On 2017-10-20 17:40:00 IST
ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் முன்னோட்டம்.
புளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

இதில் கவுதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

சந்தோஷ் பி ஜெயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். பாலமுரளி பாலா இசை அமைக்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை - சுப்ரமணிய சுரேஷ்.



படம் பற்றி இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கூறும் போது...

“ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும்” என்றார்.

“ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கும் ‘ஹரஹரமஹா தேவகி’ கூட்டணி மீண்டும் இணைவதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Similar News