சினிமா

குறள் 388

Published On 2017-10-11 15:55 GMT   |   Update On 2017-10-11 15:55 GMT
மோகன்பாபு மகன் விஷ்ணுமஞ்சு தமிழில் அறிமுகமாகும் ‘குறள் 388’ படத்தின் முன்னோட்டம்.
தெலுங்கு பட நாயகனாக இருப்பவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகனான இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ‘குறள் 388’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.

தமிழில் ‘குறள் 388’ என்றும், தெலுங்கில் ‘வோட்டர்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார். இவர்களுடன் சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர், பிரதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதை ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, ‘காட்சி நேரம்’ ஆகிய படங்களை தயாரிக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.

இசை - எஸ்.எஸ்.தமன், வசனம் - ரவிசங்கர், ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், கலை - கிரன்மன்னி, திரைக்கதை - கே.எல்.பிரவீன், எழுத்து, இயக்கம் - ஜி.எஸ்.கார்த்தி.



‘‘உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருக்குறள் மூலம் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவும் இல்லை.

முறை செய்து காப்பாற்றும் மன்னன் மக்களுக்கு இறையென்று வைக்கப்படும் என்ற 388வது குறளின் கருத்துக்கள் தான் படத்தின் கதைக்கரு. பரபரப்பான இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக இது உருவாகிறது’’ என்றார்.

விஷ்ணு மஞ்சு கூறும்போது... ‘‘இந்த படம் எனது தமிழ் திரையுலக பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும். இதில் காதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கிறது. விஜயதசமி அன்று எனது பிரவேசத்தை ஆரம்பித்திருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News