சினிமா

கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்

Published On 2017-10-07 05:38 GMT   |   Update On 2017-10-07 05:38 GMT
எம்.ஏ.பாலா இயக்கத்தில் கியாவோஸ் விதியை பயன்படுத்தி உருவாகி வரும் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ படத்தின் முன்னோட்டம்.
டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’.

கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை - எப்.ராஜ் பரத், ஒளிப்பதிவு - டேவிட் ஜான், படத்தொகுப்பு - ஆனந்த் ஜெரால்டின், பாடல்கள் - வடிவரசு, தயாரிப்பு - மாரியப்பன் ராஜகோபால், எழுத்து, இயக்கம் - எம்.ஏ.பாலா. இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் பணிபுரிந்தவர். படதயாரிப்பு பற்றி படித்தவர். பல குறும்படங்களை இயக்கி உள்ளார். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...



“இந்த உலகில் நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதை சொல்லும் கியாவோஸ் விதியை பயன்படுத்தி உருவாக்கிய கதை இது. தமிழ் சினிமா அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்த படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை பலப்படுத்துகிறது. இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா..... இல்லையா..... என்பதை சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
Tags:    

Similar News