சினிமா

களிறு

Published On 2017-10-05 02:12 GMT   |   Update On 2017-10-05 02:12 GMT
ஜி.கே.சத்யா இயக்கத்தில் ஆணவ கொலையில் புகுந்த அரசியலை தோலுரிக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘களிறு’ படத்தின் முன்னோட்டம்.
சி.பி.எஸ்.பிலிம்ஸ், அப்பு ஸ்டுடியோ ஆகியவை சார்பில் ப.விஷ்வக், ஏ.இனியவன் தயாரித்துள்ள படம் ‘களிறு’.

ஆணவ கொலைகளை மையமாக கொண்ட இந்த படம் நாட்டில் நடைபெற்ற பல்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாகி உள்ளது.

இந்த படத்தில் விஷ்வக், அனுகிருஷ்ணா, நீரஜா, தீபா ஜெயன், சிவநேசன், துரை, சுதாகர், ஜீவா, உமா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - டி.ஜே.பாலா, இசை - புதுமுகம் என்.எல்.ஜி.சிபி, கலை - மார்ட்டின் டைட்டஸ், எடிட்டிங் - நிர்மல், நடனம் - ராதிகா, ஸ்டண்ட் - திரில்லர் முகேஷ், இயக்கம் - புதிய இயக்குனர் ஜி.கே.சத்யா.



படம் பற்றி இயக்குனர் சத்யா பேசும் போது...

“இது இன்று நாட்டில் நிலவுகிற சமுதாயச் சூழலை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் படம். ‘களிறு’ என்பது ஆண் யானையைக் குறிக்கும். அரசியல்வாதிகள் தங்கள் அதிகார வெறிக்கும் பண வெறிக்கும் எதையும் செய்யத் துணிவார்கள். அவர்களின் சுயநல இரக்கமற்ற குணத்தை இது குறிப்பிடுகிறது.

வீட்டோடு முடிய வேண்டிய பிரச்சினைகளை அரசியல் வாதிகள் ஊதிப்பெரிதாக்கி நாட்டுப்பிரச்சினையாக்கி குளிர் காய்கிறார்கள். ஆணவக்கொலையில் புகுந்துள்ள அரசியலை இந்த படம் தோலுரிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் கொதித்து எழுந்தால் என்ன ஆகும் என்று சொல்கிறது. இது சினிமா மணம் இல்லாமல் விறுவிறுப்புடன் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முழுவதும் நாகர்கோவிலில் நடந்துள்ளது” என்றார்.

Tags:    

Similar News