சினிமா

குத்தூசி

Published On 2017-10-02 10:31 IST   |   Update On 2017-10-02 10:31:00 IST
இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடும் ஆர்வத்தை தூண்டும் படமாக உருவாகி இருக்கும் ‘குத்தூசி’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீ லக்ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ள படம் ‘குத்தூசி’.

இதில் ‘வத்திகுச்சி’ திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகி பாபு, ஆடுகளம் ஜெயபாலன் வெளிநாட்டு நடிகர் அந்தோணி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை - என்.கண்ணன், ஒளிப்பதிவு - பாஹி, பாடல்கள் - கவிஞர் அண்ணாமலை, எடிட்டிங் - கே.வி. மணிகண்ட பாலாஜி, கலை - ஸ்ரீஜெய் கல்யாண், வசனம் - வீருசரண், ஸ்டண்ட் - ராஜசேகர், நடனம் - ராதிகா, சங்கர், இயக்கம் - சிவசக்தி.

“ இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.



நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். அதை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? என்பதே கதை. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.

காதல், ஆக்‌ஷன், எமோ‌ஷன் என கமர்ஷியலாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் குத்தூசி உருவாகியுள்ளது” என்றார்.

Similar News