சினிமா

குரங்கு பொம்மை

Published On 2017-08-31 07:40 GMT   |   Update On 2017-08-31 07:40 GMT
நித்திலன் இயக்கத்தில் விதார்த் - பாரதிராஜா - டெல்னா டேவிஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் `குரங்கு பொம்மை' படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP வழங்கும் இயக்குநர் இயம் பாரதிர ராஜா மற்றும் விதார்த் நடிக்கும் படம்
`குரங்கு பொம்மை'.

படத்தில் நாயகனாக விதார்த்தும், நாயகியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதி ராஜா, ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இசை - பி. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு - என்.எஸ்.உதயகுமார், படத்தொகுப்பு - அபினவ் சுந்தர் நாயக், கலை - வீரமணி, வசனம் - மடோன் அஸ்வின், பாடல்கள் - நா.முத்துக்குமார், நடனம் - ராதிகா, சண்டை - மிராக்கல் மைக்கேல், கதை, திரைக்கதை, இயக்கம் - நித்திலன் சுவாமிநாதன்.



இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்க வேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன் என்று கூறி குரங்கு என்று பாராட்டி இருந்தார். கு - நல்ல குணவான், ர - சிறந்த ரசனையாளர், ங் - இங்கிதம் தெரிந்தவர், கு - குவாலிட்டியானவர் என்று பாராட்டினார்.

படம் நாளை ரிலீசாக இருக்கிறது.

Tags:    

Similar News